அமெரிக்காவில் இந்தியப் பெண்களுக்கு நடந்த இனவெறித் தாக்குதல் ஏற்படுத்திய அதிர்வலை

உலகம் செய்திகள் மற்றவை

உலகில் அவ்வப்போது நடக்கும் இனவெறி தாக்குதல்கள், மனத உரிமை மீறல்கள் மிகவும் கவலை அளிக்கின்றன. உலகலவில் ஆப்பரிக்க கறுப்பின மக்கள் பெரிதும் இனவெறித் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்றளவும் பரவலாக ஆப்பிரிக்கா கறுப்பின மக்கள் இனவெறித் தாக்குதல்களை சந்தித்து வருகின்றனர். கடந்த வருடம் அமெரிக்காவில் போக்குவரத்து காவலர் ஒருவரால் அமெரிக்க கறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டது உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
தற்சமயம் நடந்த மற்றொரு சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஓர் மெக்சிகன் பெண்ணால் இந்திய பெண்களுக்கு இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. டெக்சாஸ் மாகாணம் ப்ளேனோ நகரில் ஓர் வாகன நிறுத்துமிடத்தில் குழுமியிருந்த நான்கு இந்தியப் பெண்களிடம் ஓர் அமெரிக்க வாழ் மெக்சிகப் பெண் ஒருவர் திடீரென கடுஞ்சொற்களால் வசைப் பாடத் தொடங்கினார். சற்றும் எதிர்பார்த்திடாத இந்தியப் பெண்கள், அதை எதிர்கொள்ள முடியாமல் திகைத்து நின்றனர்.
எஸ்மெரல்டா அப்டன் என்ற பெயர் கொண்ட அப்பெண் இந்தியப் பெண்களைப் பார்த்து “எங்குப் பார்த்தாலும் நீங்களே இருக்கின்றனர், உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள்” என திட்டத் தொடங்கியதும் இந்தியப் பெண்கள் அதை வீடியோ எடுக்க முற்பட்டனர். அதனை பார்த்ததும், அமெரிக்கப் பெண் தாக்கத் தொடங்கினார்.
இத்தாக்குதல் வீடியோ சமூகவளைதலத்தில் வேகமாக பரவவே பலரும் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தனர். இத்தகவல் அறிந்த ப்ளேனோ நகரப் போலீசார் அவரை கைது செய்து விசாரணையைத் தொடகினர். காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் நடத்தியது, கொலைமிரட்டல் ஆகியப் பிரிவுகளில் அவரை கைது செய்து, 10,000 டாலர் அளவிற்கு அபராதம் விதித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *