உலகெங்கும் வசூலை குவிக்கும் ஹாலிவுட் திரைப்படம் அவதார் – 2 ; இந்தியாவிலும் பெரும் வரவேற்பு

இசை இந்தியா உலகம் சினிமா செய்திகள் தமிழ்நாடு மருத்துவம் வட அமெரிக்கா

அவதார் 2
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் நேற்று டிசம்பர் 16ம் தேதி வெளியான திரைப்படம் அவதார் 2. இப்படத்திற்கு முதல் பாகம் 2009 ஆண்டு வெளியாகி வெற்றிபெற்றதை தொடர்ந்து பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது. கொரோனா காரணமாக படம் இப்போது வெளியாகி இருக்கிறது, இல்லையென்றால் முன்பே வெளியாகி இருக்கும். ஆங்கிலத்தை தாண்டி பல மொழிகளில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.
இதுவரை ரசிகர்கள் கற்பனை கூட செய்ய பார்க்க முடியாத ஒரு உலகில் ரசிகர்களை அழைத்து சென்று, பிரமிக்க வைத்தார் ஜேம்ஸ் கேமரூன். இதுவரை உலக அளவில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக இருந்து வருகிறது. எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் நிலவி வந்த நிலையில், சுமார் 13 ஆண்டுகளுக்கு பின்னர் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது.
ஏறக்குறைய 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
முதல் நாளில் படத்திற்கு நல்ல விமர்சனமும் வந்துள்ளது. டிசம்பர் 15ம் தேதியே சில நாடுகளில் வெளியான திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் எல்லா நாடுகளில் வெளியாகி இருந்தது. 2500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் நாளில் 136.5 மில்லியன் டாலர் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் மட்டுமே ரூ. 55 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் அவதார் – 2 திரைப்படத்தின் வசூல் ரூ.130 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்தால், முதல் வார இறுதியில் இப்படத்தின் வசூல் ரூ.200 கோடியை கடக்கலாம்.
இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.3, 300 கோடி ஆகும். இதுவரை அதிகபொருட் செலவில் எடுக்கப்பட்ட, பிரமாண்ட திரைப்படம் எனும் பெருமையை இப்படம் பெற்றுள்ளது. முதல் வார இறுதியில் அமெரிக்காவில் மட்டும் இப்படம் ரூ.1, 241 கோடியும், உலக அளவில் அதிகபட்சமாக ரூ.4, 550 கோடியும் வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.