பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024: முதன்முறையாக ஒலிம்பிக்ஸ் பதக்கம் பெற்று வரலாறு படைத்த செயின்ட் லூசியா நாடு

உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு வினோதங்கள்

பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொருவரும் தங்களது நாட்டிற்கு ஒரு வெண்கலப் பதக்கத்தையாவது வென்று கொடுத்துவிட வேண்டும் என்று தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்காவின் ஷா கேரி ரிச்சர்ட்சன் தான் தங்கப் பதக்கத்தை தட்டிச் செல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்..
ஆனால், அமெரிக்க வீராங்கனை மீது அனைவரும் வைத்திருந்த நம்பிக்கையை தவிடுபொடியாக்கி, தங்கத்தை தட்டிச் சென்றார் செயிண்ட் லூசியா நாட்டைச் சேர்ந்த வீராங்கனை ஜூலியன் ஆல்பிரட். மொத்தமே 1 லட்சத்து 80 ஆயிரம் மட்டுமே மக்கள் தொகை கொண்ட நாடான செயிண்ட் லூசியா, கரீபியன் நாடுகளில் இருக்கும் ஒரு குட்டி நாடு. வட அமெரிக்கக் கண்டத்தின் இந்த கிழக்கு கரீபியன் நாடு மிகவும் சிறியது. அதை உலக வரைபடத்தில் கண்டுபிடிக்க ஒரு லென்ஸ் தேவைப்படும். இதற்கு முன், இந்த நாட்டைச் சேர்ந்த எந்த விளையாட்டு வீரரும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றதில்லை. ஜூலியன் ஆல்பிரட் தங்கப் பதக்கத்துடன் இந்த வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜூலியன் ஆல்பிரட் தங்கப் பதக்கம் வென்றதையடுத்து, செயின்ட் லூசியா ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 33வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம், 120 கோடி மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா தற்போது மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் 54வது இடத்தில் உள்ளது. இருப்பினும், செயின்ட் லூசியாவுக்கு கீழே இந்தியா மட்டுமல்ல, டென்மார்க் (49), போலந்து (45) போன்ற ஐரோப்பிய நாடுகளும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *