பிஆர்எஸ்ஐ தேசிய மாநாட்டில், ஐஓசி மற்றும் என்எல்சி நிறுவனங்கள் உட்பட தமிழகத்திற்கு 9 விருதுகள் வழங்கப்பட்டது.

இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் முதன்மை செய்தி

பப்ளிக் ரிலேஷன்ஸ் சோசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்எஸ்ஐ) அமைப்பின் 46-வது அகில இந்திய தேசிய மாநாடு சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் டிசம்பர் 20 முதல் 22 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டை அம்மாநிலத்தின் துணை முதல்வர் விஜய் சர்மா தொடங்கி வைத்தார்.இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்த சேவையாற்றிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகம் மட்டும் 9 விருதுகளை பெற்றுள்ளது. குறிப்பாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) தென் மண்டலப் பிரிவு மற்றும் நெய்வேலி லிக்னைட் நிறுவனம் (என்எல்சி) ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் விருதுகளை வென்றன. மிகச் சிறந்த முறையில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக பிஆர்.எஸ்.ஐ.-யின் சென்னை கிளைக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. மக்கள் தொடர்புத் துறையில் நீண்ட காலமாக சிறப்பாக பணியாற்றியதற்காக பிரிசம் பி.ஆர். நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குநர் சத்யன் பட்டுக்கு பி.ஆர்.எஸ்.ஐ. லீடர்ஷிப் விருது வழங்கப்பட்டது. தமிழகத்திற்கு அதிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன; அப்போலோ மருத்துவமனை, கோரமண்டல் இண்டஸ்ட்ரீஸ், கேட்டலிஸ்ட் பி.ஆர். உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.மக்கள் தொடர்புத் துறையில் டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழகமும் இம்முறை அதிக எண்ணிக்கையில் விருதுகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *