ஜனநாயகன் பட தணிக்கை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சென்சார் போர்டு கேவியட் மனு.

இந்தியா சிறப்பு சினிமா செய்திகள் தமிழ்நாடு நீதி மன்றம் பொழுதுபோக்கு

விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் தணிக்கை சான்று தொடர்பான விவகாரம் தற்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த வழக்கில் சென்சார் போர்டு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ‘ஜனநாயகன்’ படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்று வழங்கிய தனி நீதிபதி உத்தரவை அண்மையில் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், இந்த வழக்கை மீண்டும் விசாரித்து புதிய உத்தரவு வழங்க வேண்டும் என தனி நீதிபதிக்கு உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்பதால், சென்சார் போர்டு முன்எச்சரிக்கையாக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. படக்குழு மேல்முறையீடு செய்தால், தங்களது தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என அந்த மனுவில் சென்சார் போர்டு கோரியுள்ளது. தணிக்கை சான்று தொடர்பான பிரச்சினையால் ‘ஜனநாயகன்’ படம் பொங்கல் வெளியீட்டில் வெளியாகாமல் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *