தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. இன்று (15-03-2026) மாலை 4 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி,
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடக்கிறது.
அசாமில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கேரளாவிலும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
நான்கு மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படுகின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
வேட்புமனுத் தாக்கல் தொடக்கம் : 30-03-2026
வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் : 06-04-2026
வேட்புமனு பரிசீலனை : 07-04-2026
வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் : 09-04-2026
வாக்குப் பதிவு நாள் : 23-04-2026
வாக்கு எண்ணிக்கை : 04-05-2026
மன்னிக்கவும், குறைந்த இணையத்தை பயன்படுத்தும் இந்த பக்கத்தில் கட்டுரையின் இந்த பகுதியை காணவியலாது.
முழு உள்ளடக்கத்தையும் காண இந்த பக்கத்தின் அசல் வடிவத்தை காணவும்.
தமிழ்நாட்டில் 2021ல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதன் ஐந்தாண்டு கால ஆட்சிக் காலம் மே மாதம் முடிவுக்கு வருகிறது.
அதேபோன்று, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக ஆட்சி, கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சியின் 5 ஆண்டு பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.

