இணையத்தின் பயன்பாட்டில், வேகம் ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. ஆரம்பத்தில் 2ஜி தொழில்நுட்பத்துடன் தொடங்கிய இணைய சேவைகள், பின்னர் 3ஜி, 4ஜி என வளர்ந்து, தற்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் 5ஜி சேவைகள் அறிமுகமாகி நடைமுறையில்யுள்ளன. இந்நிலையில், தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முன்னணி நாடாக இருக்கும் சீனா, உலகின் முதல் 10ஜி இணைய சேவையை அறிமுகம் செய்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது, மேலும் சீனா அடிக்கடி புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது உலகின் முதல் 10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கில், ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம் சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தில் உள்ள சியோங்கான் நியூ பகுதியில் சீனாவின் முதல் 10ஜி ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை தொடங்கியுள்ளது. இந்த சேவையின் மூலம் பயனர்கள் மின்னல் வேகத்தில் இணையதள அணுகலை அனுபவிக்க முடியும்.10 ஜி இணையதள சேவையின் மூலம் 3 மில்லியன் நொடிகளில் 9834 எம்பிபிஎஸ் வேகத்தில் தரவுகளை பதிவிறக்கம் செய்யவும், 1,008 எம்பிபிஎஸ் வேகத்தில் பதிவேற்றம் செய்யவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஜி இணைய சேவையை அந்த நாட்டின் மற்ற பகுதிகளுக்கு விரைவில் விரிவாக்குவதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

