முதலமைச்சரின் வெற்றிகரமான சுற்றுப்பயணம் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு

NRI தமிழ் டிவி அரசியல் செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் அரசியல் பயணத்தை மேற்கொண்டு, தமிழகத்திற்கு ரூ.7,616 கோடி முதலீட்டுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு அரசியல் பயணமாக அமெரிக்கா சென்றார். அவர் சான் பிரான்சிஸ்கோவில் 29-ம் தேதி நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர், செப்டம்பர் 2-ம் தேதி சிகாகோவில் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, அவர்களுக்கும் தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். இரு இடங்களிலும், பல தமிழ் சங்கங்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், அமெரிக்காவில் வாழும் தமிழர்களுடன் முதல்வர் சந்தித்து உரையாடினார்.அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்த முதல்வர் சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில், முதலமைச்சரை அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர், தனது பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவித்தார்.17 நாட்கள் நீடித்த இந்த சுற்றுப்பயணத்தில், உலகின் 18 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும், உலகின் புகழ்பெற்ற 25 நிறுவனங்களுடன் சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. பல நிறுவனங்கள் தமிழகம் வர விருப்பம் தெரிவித்துள்ளன, அதில் சென்னையில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்கவுள்ளது.ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்குவதற்கு அரசு தரப்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார். மேலும் ஒப்பதங்கள் செய்த அனைத்து நிறுவனங்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *