அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் ஏஎச்-64 அப்பாச்சி ஹெலிகாப்டர், உலகின் மிகவும் மேம்பட்ட பல்துறை ஹெலிகாப்டர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்திய ராணுவத்துக்கு ஆறு ஏஎச்-64 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க 2020ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. முதல் தவணையாக 3 ஏஎச்-64 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. சரக்கு விமானம் மூலம் உ.பியின் ஹிண்டன் விமானப்படை தளத்தில் வந்தடைந்த 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் விரைவில் ராணுவத்தில் இணைக்கப்படவுள்ளது.

