சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 92 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது. கேஸ் சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் முதல் நாளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.அதன்படி, யில் வீட்டு பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி ரூ.1,118 உள்ளது.
வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் விலைரூ. 92.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதால் 1,945 ரூபாயில் இருந்து 1,852.50 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் வர்த்தக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் 1,917 ரூபாயாக இருந்தது. பிப்ரவரி மாதம் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், மார்ச் மாதம் 351 ரூபாய் உயர்த்தப்பட்டதால், 2,268 ரூபாயை தொட்டது. அதன் பின்னர், ஏப்ரல் மாதம் 76 ரூபாயும், மே மாதம் 171 ரூபாய் குறைக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் மாதம் 84 ரூபாய் அதிகரித்த சிலிண்டர் விலை, கடந்த மாதம் 8 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது மேலும் 92 ரூபாய் 50 குறைக்கப்பட்டதால், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் வர்த்தக சிலிண்டர் விலை ஆயிரத்து 850 ரூபாயை தொட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வர்த்தக சிலிண்டர் விலை ஆயிரத்து 831 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.