அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக, ரஷ்யாவும் அணு ஆயுத சோதனைகளை நடத்தும் என எச்சரித்துள்ளார். கடந்த அக்டோபர் 26ஆம் தேதி, அணுசக்தியில் இயங்கும் ‘புரேவெஸ்ட்னிக்’ ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றதாக புடின் அறிவித்தார். இந்த ஏவுகணை பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்து இலக்கை தாக்கும் திறன் கொண்டது.அதற்குப் பிறகு, அக்டோபர் 29ஆம் தேதி, அணுசக்தியில் இயங்கும் ‘பொசைடன்’ நீர்மூழ்கி ட்ரோன் சோதனையும் வெற்றிகரமாக நடந்ததாக அவர் தெரிவித்தார்.இந்த சோதனைகள் மூலம் ரஷ்யா, அணு ஆயுதத் திறனில் அமெரிக்காவை முந்தியதாக கூறப்பட்டது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவுக்கு ஈடாக தங்களும் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவோம் என அறிவித்தார்.இதற்கு எதிராக புடின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அதே நேரத்தில் ரஷ்ய அதிகாரிகளுக்கு “அணு ஆயுத சோதனைகளுக்கான செயல்திட்டத்தை தயார் செய்யுங்கள்” என்று உத்தரவிட்டுள்ளார்.

