இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்.

இந்தியா இலங்கை உலகம் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு

இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்கள் நேற்று இரவு தங்கள் தாயகத்திற்கு திரும்பினர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை, அவர்கள் தனி வாகனத்தில் ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.மார்ச் 16-ம் தேதி, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஆரோக்கிய சுகந்தன் மற்றும் இஸ்ரேல் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு அருகே கைப்பற்றினர். அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, படகில் இருந்த 21 மீனவர்களை கைது செய்தனர். இதில், அந்தோணி என்ற 50 வயதான மீனவர் இரண்டாவது முறையாக சிறைக்குப் பிடிக்கப்பட்டதால், ஆறு மாத சிறை தண்டனை ஊர்காவல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டு, கொழும்பில் உள்ள வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார். அவரது தண்டனை காலம் முடிந்த பிறகு விடுதலை செய்யப்பட்ட அந்தோணி மற்றும் நவம்பர் 12ஆம் தேதி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் உட்பட மொத்தம் 5 பேர், கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை இரவு சென்னை வந்தனர். பின்னர், 5 மீனவர்களும் தனி வாகனத்தில் ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொண்டு செல்லப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *