புதிய கட்சியை தொடங்கியுள்ளார் எலான் மஸ்க்.

அமெரிக்கா அரசியல் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், தற்போது புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.2024 ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் எலான் மஸ்க். இதற்குப் பிறகு, டிரம்ப் நிர்வாகத்தில் அரசு செயல் திறன்துறை (டிஓஜிஇ) தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், உள்நாட்டு செலவினம் மற்றும் வரி குறைப்பு தொடர்பான மசோதாவை டிரம்ப் முன் வைத்ததால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, புதிய கட்சி தொடங்குவது குறித்து மக்களின் கருத்துகளை கேட்டறிந்தார். இதற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்த நிலையில், ‘தி அமெரிக்கா பார்ட்டி’ எனும் புதிய அரசியல் கட்சியை எலான் மஸ்க் 5-ம் தேதி தொடங்கியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது ‘2 கட்சிகள்’ மட்டுமே அமெரிக்காவை ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப் போக்கை முறியடிப்போம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *