தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை விதிக்க சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அரசியல் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு நீதி மன்றம் முதன்மை செய்தி

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், ஜனவரி 10ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா, தற்போதைய தண்டனைகளை மேலும் கடுமையாக மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டது மற்றும் அதனை அன்றே நிறைவேற்றப்பட்டது. பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில், குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும். மேலும், மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தால், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்கப்படும். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால், மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தும் செயலுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும், மேலும் பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்கட்சியினரின் ஆதரவை பெற்ற நிலையில், குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி பாலியல் குற்றங்களுக்கு தொடர்பான தண்டனைகளை கடுமையாக வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். இப்போது, இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக அதை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் ஒப்புதலுக்குப் பிறகு, அந்த சட்ட திருத்தங்கள் தமிழ்நாட்டில் அமலாக்கம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *