செவ்வாய் கிரகத்துக்கு ஹியூமனாய்ட் ரோபோவை கொண்டு செல்லும் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்.

அமெரிக்கா அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகம் கண்டுபிடிப்பு சிறப்பு செய்திகள் விண்வெளி சார்ந்தவை

மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேறச் செய்வதற்கான திட்டங்களை எலான் மஸ்க் பல முறை கூறியுள்ளார். இந்நிலையில், அடுத்த ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்திற்கு டெஸ்லாவின் ‘ஆப்டிமஸ்’ ஹியூமனாய்ட் வகை ரோபோவை ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலன் மூலம் அனுப்பும் திட்டம் உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். “அடுத்த ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்திற்கு இந்த ஸ்டார்ஷிப் அனுப்படலாம் என கூறப்படுகிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலங்கள் சாப்ட் லாண்டுங் முறையில் தரையிறங்கும் முயற்சி வெற்றிகரமாக நடந்தால், 2029 ஆம் ஆண்டில் மனிதர்கள் அங்கு தரையிறங்க வாய்ப்பு உள்ளது” என எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை மீட்டெடுக்க மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *