அமெரிக்க அதிபர் டிரம்பால் உருவாக்கப்பட்ட ‘டாட்ஜ்’ துறையில் இருந்து விலக்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அரசு ஊழியர்களை நீக்குதல் மற்றும் அரசு செலவுகளை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் டாட்ஜ் துறை ஈடுபட்டிருந்தது. மே மாதத்திலிருந்து, டாட்ஜ் துறையின் தலைவராக இருந்த எலான் மஸ்க், இத்துறையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த ஜனவரி மாதம், அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்ற பிறகு, அவர் பல சட்ட திருத்தங்களை மேற்கொண்டு, அமெரிக்க அரசின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக ‘டாட்ஜ்’ என்ற புதிய துறையை உருவாக்கினார். இந்த துறையின் தலைவராக டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். மஸ்க் நிர்வாகத்தில் கொண்டு வந்த பிறகு பல அதிரடி முடிவுகளாக அரசின் ஒருநாள் செலவுகளை ரூ.34 ஆயிரம் கோடி வரை குறைக்க உதவியது குறிப்பிடத்தக்கது.

