அமெரிக்க துணை அதிபர் வன்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தாஜ்மகாலை பார்வையிட்டார்.

அமெரிக்கா அரசியல் இந்தியா உலகம் சிறப்பு சுற்றுலா செய்திகள் முதன்மை செய்தி

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், தாஜ்மகாலை உண்மையான அன்பின் சான்று என புகழ்ந்துள்ளார். அவர் தனது மனைவி உஷா வான்ஸ் மற்றும் மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து பார்வையிட்டனர். நேற்று ஜெய்ப்பூரில் இருந்து ஆக்ராவிற்கு விமானம் மூலம் வந்தனர். அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் தளத்தில், காலத்தால் அழியாத பக்தி, துடிப்பான கலாச்சாரம் மற்றும் ஆன்மிக மரபுக்கு பெயர் பெற்ற இந்தியாவின் புனித மையமான உத்தரப்பிரதேசத்திற்கு வருகை தந்துள்ள அவர்களுக்கு அன்பான வரவேற்பு என குறிப்பிட்டுள்ளார். தாஜ்மகாலை தனது குடும்பத்துடன் பார்வையிட்டு மகிழ்ந்தார். பின்னர், அவர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில், தாஜ்மகாலை உண்மையான அன்பின் சான்று, மனித புத்திகூர்மையின் அடையாளம் எனக் கூறயுள்ளார். மேலும் அவர்கள் இன்று அரசுமுறை பயணம் முடித்து அமெரிக்காவிற்கு திரும்பி செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *