மோகன்லால் நடித்த எம்புறான் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள்; 17 காட்சிகள் நீக்கப்படும் என அறிவிப்பு

இசை இந்தியா சினிமா செய்திகள் நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் உள்ளது சர்ச்சையான நிலையில், தனது ரசிகர்களிடம் பேஸ்புக் பக்கத்தில் நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கடந்த வியாழக்கிழமை வெளியான எம்புரான் திரைப்படம், 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளது. இந்த நிலையில், 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்து படத்தில் சர்ச்சைக்கு உள்ளான காட்சி இடம்பெற்றிருந்தது. குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகளுக்கு பாஜக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, 17 காட்சிகளை நீக்க படக்குழுவுக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், குறிப்பிட்ட எந்த மதத்துக்கும் ஆதரவாக தாம் படத்தில் நடிக்கவில்லை என்றும், ரசிகர்களின் மனது புண்படும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தால் அதற்காக வருந்துவதாகவும் மோகன்லால் கூறியுள்ளார்.
தணிக்கை வாரிய கோரிக்கையை ஏற்று 17 காட்சிகளை நீக்க முடிவெடுத்துள்ளதாகவும் மோகன்லால் கூறியுள்ளார். மறு தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் திங்கட்கிழமை முதல் திரையிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட ஒரு மதத்தினரை தவறாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் கேரள நிர்வாகிகள் எம்புரான் படத்தை பாராட்டியுள்ளனர். சர்ச்சைக்குரிய படத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பார்த்தார். மத்திய அரசு குரலை நெரிப்பதாக விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *