பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் மற்றும் அகாலிதளம் கட்சியின் முன்னாள் தலைவர் சுக்பீர் சிங் பாதலை கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2007-2012 வரை பஞ்சாபில் சிரோமணி அகாலி தள் ஆட்சியில் இருந்தது, அப்போது பிரகாஷ் சிங் பாதல் முதல்வராகவும், சுக்பிர் சிங் பாதல் துணை முதல்வராகவும் பணியாற்றினர். 2007-ல், சீக்கிய மதத்தை அவமதித்ததாக கூறப்படும் குர்மீத் ராம் ரஹீமுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதற்கான விவாதங்கள் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்தன. இதற்கான விசாரணையை அகால் தக்த் மேற்கொண்டது. பிரகாஷ் சிங் பாதல் மறைந்த பிறகு, சுக்பீர் சிங் பாதல் மற்றும் மற்றவர்கள் பொற்கோவில் சமையலறையில் பாத்திரங்களை சுத்தம் செய்ய கட்டாயமாக நியமிக்கப்பட்டனர். பக்தர்களின் காலணிகளை துடைக்கவும் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சிரோமணி அகாலி தள் கட்சியின் தலைவராக இருந்து விலக வேண்டும் என 5 உயர் மத தலைவர்கள் தீர்மானித்தனர். தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்ட சுக்பீர் சிங் பாதல் மற்றும் மற்றவர்கள், அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு வந்து, தண்டனையை ஏற்கும் விதமாக சமையலறையில் பாத்திரங்களை சுத்தம் செய்தனர். பாதலின் கால் துண்டிக்கப்பட்டதால் அவருக்கு விலக்கு அளித்து கோயில் வாயில் காப்பாளராக பணியாற்ற உத்தரவிடப்பட்டது. இன்று காலை, தண்டனையை நிறைவேற்றுவதற்காக பொற்கோயில் வாயிலில் சக்கர நாற்காலியில் ஈட்டியை பிடித்துக் கொண்டு காவல் காத்திருந்த சுக்பீர் சிங் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.இந்த தாக்குதலில் சுக்பிர் சிங் காயமடையவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். அவர் உயிருடன் தப்பிய நிலையில், துப்பாக்கிச்சூடு செய்த நபரை சுற்றி பிடிக்க சுக்பீர் சிங்கின் ஆதரவாளர்கள் நடவடிக்கை எடுத்தனர். துப்பாக்கியால் காயமடைந்த நபர் பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், அந்த நபரின் பெயர் நாராயணன் சிங் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

