திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கோயில்கள் சித்தர்கள் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் அண்ணாமலையார் சன்னதியின் முன் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அதன் பின்னர், காலை பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் பவனி வந்தார், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்றிரவு, அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி பவனி நடைபெறும். வரும் 5ம்தேதி 2ம்நாள் காலை உற்சவத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகளின் பவனி நடைபெறும். 6ம்தேதி 3ம் நாள் காலை உற்சவத்தில் நாக வாகனத்தில் சந்திரசேகரர் பவனி நடைபெறும், மேலும் இரவு உற்சவத்தில் சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்னவாகனங்களில் பஞ்சமூர்த்திகள் பவனி வருவார். 7ம்தேதி 4ம்நாள் உற்சவத்தில், காலை நாக வாகனத்தில் சந்திரசேகரர் மற்றும் இரவு வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையார் பவனி நடைபெறும். 8ம் தேதி 5ம்நாள் காலை உற்சவத்தில் கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் மற்றும் இரவு உற்சவத்தில் பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் பவனி நடைபெறும். 9ம்தேதி 6ம்நாள் காலை உற்சவத்தில் வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் பவனி வருகிறார், மேலும் இரவு உற்சவத்தில் வெள்ளித் தேரோட்டம் நடைபெறும். 10ம் தேதி 7ம் நாள் உற்சவத்தில் மகா தேரோட்டம் நடைபெறும், அதில் மாட வீதியில் பஞ்சரதங்கள் பவனி வரும். 11ம்தேதி 8ம்நாள் உற்சவத்தில் காலையில் குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் பவனி வருகிறார், மாலையில் பிச்சாண்டவர் உற்சவம் , இரவு குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் பவனியாக நடைபெறும். 12ம்தேதி 9ம் நாள் காலை உற்சவத்தில் புருஷாமுனி வாகனத்தில் சந்திரசேகரர் மற்றும் இரவு உற்சவத்தில் கைலாசம், காமதேனு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் பவனியாக வருகிறார்கள். இதனை தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வான 3ம்தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும், மேலும் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரத்தில் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *