ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவும் ஹைட்ரஜன் ரயில் தயாரிப்பில் ஈடுபட உள்ளது. சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில், ஹைட்ரஜன் எரிபொருள் கொண்டு இயங்கும் ரயிலை உருவாக்குவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வே 35 ஹெரிடேஜ் ரயில்களை உருவாக்கும் என்றும், ஒவ்வொரு ரயிலுக்கும் ரூ.80 கோடி வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.மேலும், மலைப்பகுதிகளில் ஹைட்ரஜன் ரயில்களை இயக்குவதற்கான அடிப்படையை உருவாக்கதிற்கு ரூ.70 கோடி செலவிடப்படும்.வடக்கு ரயில்வேயின் ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் இந்த ரயிலை இயக்குவதற்கான திட்டம் உள்ளது. ஹரியானாவின் ஜிந்த் நகரில் அமைக்கப்பட்ட 1 மெகாவாட் பாலிமர் எலக்ட்ரேலைட் மெம்பரேன் எலக்ட்ரோலைசர், ரயிலுக்கு தேவையான ஹைட்ரஜனை வழங்கும். இந்த எரிபொருள் நிரப்பும் செயல்முறை இதற்கான முக்கிய அம்சமாகும்.இந்த எரிபொருள் நிரப்பும் மையத்தில் 3,000 கிலோ ஹைட்ரஜனை சேமிக்க முடியும். ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, இங்கு உள்ள ஹைட்ரஜன் கம்ப்ரஸர் மற்றும் டிஸ்பென்சர்கள் மூலம் ரயில்களில் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பப்படும் என தகவல்.

