கலவரமான கால்பந்து ஆட்டம்; அர்ஜென்டினா நாட்டில் நடந்த துயரம், 3பேர் உயிரிழப்பு

உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தென் அமெரிக்கா நிகழ்வுகள் போராட்டம்/ கலவரம் மற்றவை முதன்மை செய்தி விபத்துகள் விளையாட்டு

அர்ஜென்டினாவில் கால்பந்து ஆட்டத்தின் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோபா சூடாமெரிக்கானா கிளப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் சிலி நாடுகளைச் சேர்ந்த அணிகள் விளையாடிய போது ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஆயுதங்களால் இரு அணி ரசிகர்களும் தங்களுக்குள் கடுமையாக தாக்கிக் கொண்டனர். சம்பவம் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் உள்ள லிபர்டாடோர்ஸ் டி அமெரிக்கா மைதானத்தில், நேற்று போட்டி நடந்துகொண்டிருந்தபோது, இரு அணி ரசிகர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
சிலி அணியின் ரசிகர்கள், முதலில் உள்ளூர் ரசிகர்கள் மீது கற்கள், குச்சிகள், பாட்டில்கள் மற்றும் இருக்கைகளை வீசியதாக கூறப்படுகிறது. இதற்குப் பதிலடியாக, அர்ஜென்டினாவின் ரசிகர்கள் எதிரணி ரசிகர்களின் பகுதிக்குச் சென்று அவர்களைத் தாக்கி, சிலரது ஆடைகளைக் கழற்றி அவமானப்படுத்தியுள்ளனர். வன்முறை மேலும் அதிகரிக்கவே, சிலி நாட்டு ரசிகர் ஒருவர் தப்பிப்பதற்காக கேலரியில் இருந்து குதித்துள்ளார்.
இந்த மோதலில் 10 பேர் காயமடைந்ததாகவும், அதில் சிலருக்கு கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
வன்முறை காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு, பின்னர் நிர்வாகக் கமிட்டியால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இரு நாட்டு அரசுகளும் இந்த வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக, சிலி அதிபர் கேப்ரியல் போரிக் (Gabriel Boric), போட்டி நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் ரசிகர்கள் மோதல் மற்றும் உயிரிழப்பு தொடர்பாக 100-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *