சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு நான்கு வயது சிறுவன் பலி; தமிழக சுகாதாரத் துறை அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

அரசியல் ஆரோக்கியம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி

மதுரவாயல் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மதுரவாயலை சேர்ந்தவர்கள் அய்யனார், சோனியா தம்பதியனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் ரக்‌ஷன் (வயது 4 )அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ரீகேஜி படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் கடந்த 6 ஆம் தேதி அன்று காய்ச்சல் காரணமாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து சிறுவனின் உடல் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் டெங்கு காய்ச்சல் வந்து சிறுவன் உயிரிழந்ததாக கூறி உடலை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கு சென்ற காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, எங்கள் பகுதியில் தண்ணீர் குழாய் வசதி இல்லாததால் மாநகராட்சி வாகனம் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பேரல்களில் பிடித்து வைக்கும் நிலை உள்ளது. அதனால் அதில் விஷகொசுக்கள் உருவாகி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் அப்பகுதியில் முறையான கழிவு நீர் கால்வாய் வசதியும் இல்லை எனவும் சமூகவிரோதிகள் கழிவு நீரை கொண்டு வந்து இப்பகுதியில் ஊற்றிவிட்டு செல்வதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.