ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம்: பிரான்ஸ், இங்கிலாந்து ஆதரவு

இந்தியா உலகம் ஐரோப்பா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள்

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இந்தியா நிரந்தர இடம்பெற பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்பட்டது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக ஆதரிப்பதாக, பிரான்ஸ் நாட்டுக்கான நிரந்தர துணைப் பிரதிநிதி நதாலி பிராட்ஹர்ஸ்ட் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பாதுகாப்பு கவுன்சில் அதன் அதிகாரத்தையும் செயல்திறனையும் வலுப்படுத்தும் வகையில், உலகம் முழுவதிலுமிருந்து அதிகமான பிரதிநிதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதன் நிர்வாக மற்றும் செயல்பாட்டுத் தன்மையைப் பாதுகாக்க, விரிவாக்கப்பட்ட கவுன்சில் 25 உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம் என்றார்.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான விவாதத்தில் நேற்று முன்தினம் பேசிய ஐ.நா.வுக்கான இங்கிலாந்து தூதர் பார்பரா உட்வர்ட் கூறுகையில் இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் மற்றும் ஆப்பிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அந்த நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்து மாற்றம் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *