அமெரிக்காவில் தேவாவின் ‘பாஷா டூர்’ இசை நிகழ்ச்சி

இசை இந்தியா கலை / கலாச்சாரம் சிறப்பு செய்திகள் நிகழ்வுகள் வட அமெரிக்கா விளம்பரங்கள்

V3 eventz வழங்கும் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் “பாஷா டூர்” (BAASHA TOUR) இசைக்கச்சேரி வரும் செப்டெம்பர் 7ஆம் தேதி முதல்முறையாக அமெரிக்காவில் டால்லஸ்இல் நடைபெற உள்ளது.

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் “தேனிசை தென்றல்” தேவா. King of Gaana என அழைக்கும் அளவிற்கு இவரது கானா பாடல்கள் இன்று வரை ரசிகர்களை ஆட வைக்கின்றன.

அவரது ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அமெரிக்காவில் செப்டம்பர் 7 ஆம் தேதி டாலஸ்லில் உள்ள CUTX ALLEN EVENT CENTERல் , செப்டம்பர் 14ம் தேதி சன் ஜோசேவில் SAN JOSE CENTER FOR THE PERFORMING ARTS , செப்டம்பர் 21ம் தேதி விர்ஜினியாவில் HYLTON PERFORMING ARTS CENTER , செப்டம்பர் 27ம் தேதி சிகாகோவில் YELLOW BOX மற்றும் அக்டோபர் 5ம் தேதி நியூ செர்சியில் NEW JERSEY PERFORMING ARTS CENTER (NJPAC) ஆகிய இடங்களில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் தேவா அவர்கள் பங்கேற்க உள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சியில் திரை இசை பிரபலங்கள் சபேஷ்முரளி, அனுராதா ஶ்ரீராம், மனோ, ஶ்ரீகாந்த் தேவா மற்றும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்கள் உட்பட பல பிரபல இசை கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வாழ்த்துக்களுடன் தேவா அவர்களின் “பாஷா டூர்” இசை நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *