இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துள்ளார். ஆளும் பாஜக சார்பில் கிழக்கு டெல்லியின் எம்.பி.யாக பதவி வகித்த கவுதம் கம்பீர், கிரிக்கெட் பயிற்சியில் கவனம் செலுத்துவதற்காக தீவிர அரசியலில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துள்ளார். இந்நிலையில், மரியாதை நிமித்தமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கவுதம் கம்பீர் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பதவி வகித்து வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடருடன் நிறைவடைகிறது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வலம் வருகின்றன. துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணியை வழிநடத்துவதற்கான விருப்பம் இருப்பதாக கம்பீரும் தெரிவித்திருந்தார். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீர், அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
