ஏப்ரல் 20ந்தேதி அன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வரி வசூல் செய்யப்பட்டது. அன்றைய தினம் 9.8 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.68,228 கோடி செலுத்தப்பட்டது.
2023 ஏப்ரல் மாதத்தில், 1,87,035 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தின் ஜிஎஸ்டி வருவாயை விட இது 12% அதிகமாகும்.
முதல் முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் ₹1.75 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2023 மார்ச், மொத்தம் 9 கோடி இ-வே பில்கள் உருவாக்கப்பட்டதாகவும், இது அதற்கு முந்தைய மாதத்தை விட 11% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.