கடும் பனிப்பொழிவு, பனிப்புயலில் சிக்கித் தவிக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன்; மின்சாரம், போக்குவரத்து பாதிப்பால் மக்கள் கடும் அவதி

அரசியல் உக்ரைன் உலகம் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி ரஷ்யா வரும் நிகழ்ச்சிகள் வானிலை விபத்துகள்

ரஷ்யாவில் வீசி வரும் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் வெப்பநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
கடுங்குளிரில் இருந்து சமாளிக்க வழங்கப்படும் ஹீட்டர் சேவை கடந்த சில நாட்களாக இயங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் ஹீட்டர் சேவை வழங்கி வரும் ஆலையில் விதிமீறிலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மின்சார கம்பிகள் மீது அதிகளவிலான பனி படிந்திருப்பதால் மின்சாதன பொருட்களை இயக்க முடியாமல் தவிப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *