ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு ரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்: இந்திய ரயில்வே துறை அறிவிப்பு

அரசியல் ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கோயில்கள் செய்திகள் தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

22ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை விழா வரும் 22ம் தேதி விமரிசையாக நடக்கிறது. பிரதமர் மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். சிலை பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் நேற்று முன்தினம் தொடங்கின.இந்த சடங்குகளை 121 ஆச்சார்யார்கள் மேற்கொண்டனர். இதனிடையே இன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமர் சிலை கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது. வரும் 22ம் தேதி மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு, பகல் 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்நிகழ்வுநடக்கிறது. இந்நிலையில் 22ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள 9000 திரைகளில் கும்பாபிஷேக நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *