சர்வதேச திரைப்பட விழா விருது: சிறந்த நடிகராக விஜய் சேதுபதி மற்றும் நடிகை சாய் பல்லவி தேர்வு.

இசை சிறப்பு சினிமா செய்திகள் தமிழ்நாடு பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் முதன்மை செய்தி

2024 ஆம் ஆண்டின் சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 12 முதல் 19 வரை நடைபெற்றது. தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் இந்த விழாவை நடத்தி, 180 படங்களை திரையிடப்பட்டது.விழாவின் இறுதியில், சிறந்த படம், இயக்குநர், நடிகர் மற்றும் நடிகை ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அதில் சிறந்த நடிகருக்கான விருது மகாராஜா படத்திற்காக விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகைக்கான விருது அமரன் படத்திற்காக சாய் பல்லவிக்கும் வழங்கப்பட்டது. இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. சிறந்த படமாக அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தயாரிப்பாளர் மகேந்திரன் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் சிறந்த படமாக லப்பர் பந்து தேர்தெடுக்கபட்டது. இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து மற்றும் தயாரிப்பாளர் லஷ்மணன் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.மேலும் சிறந்த துணை நடிகர்: தினேஷ் (லப்பர் பந்து) சிறந்த துணை நடிகை: துஷரா விஜயன் (வேட்டையன்) சிறந்த இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார் (அமரன்) மக்களுக்கு பிடித்த நடிகர்: அரவிந்த் சாமி (மெய்யழகன்) மக்களுக்கு பிடித்த நடிகை: அன்னா பென் (கொட்டுக்காளி) சிறந்த பொழுதுபோக்குப் படம்: வேட்டையன் சிறந்த கதை: நித்திலன் சாமிநாதன் (மகாராஜா) ஆகியோர்க்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *