நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதலில் விளையாடிய 8 போட்டிகளில், ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக வலுவான கம்பேக் கொடுத்து, அதுவும் இறுதி லீக் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி தற்போது பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இது அந்த அணியின் கூட்டு முயற்சியால் நிகழ்ந்தி ஒரு அபரிவிதமான மேஜிக் ஆகும். அதேநேரம், ஆரம்பகட்டங்களில் அணியின் தொடர் தோல்விகளுக்கு காரணமாக இருந்த 3 வீரர்கள் தான், பெரும் அழுத்தத்திற்கு மத்தியிலான சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றியுள்ளனர்.
20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் அடித்து பெங்களூர் அணி ஆட்டத்தை முடித்தது. சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் 191 சேர்த்தது. இதனால் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

