இஸ்ரோவின் புதிய திட்டம் வேற்று கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் ஆய்வு லடாக்கில் துவக்கம்

இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் விண்வெளி சார்ந்தவை

விண்வெளி மற்றும் வேற்று கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் உள்ள லே நகரில் புதிய சோதனைகளை இஸ்ரோ ஆரம்பித்துள்ளது. இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், இந்தியா ஒரு விண்வெளி மையத்தை அமைக்கவும் முயற்சிக்கிறது. வேற்று கிரகங்களுக்கு கலன்களை அனுப்புவதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன. அடுத்த ஆண்டு ககன்யான் திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ள விமானப்படை வீரர்களில் மூவரை தேர்வு செய்து, அவர்களுக்கு தேவையான பயிற்சியை இஸ்ரோ வழங்கும். அண்மையில் இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோமநாத், பாதுகாப்பு மற்றும் திட்டத்தின் வெற்றியை கருத்தில் கொண்டு, ககன்யான் விண்கலத்தின் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார்.இது தொடர்பாக, விண்வெளி மற்றும் வேற்று கிரகங்களில் மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்களை ஆராய்வதற்கான முயற்சிகள் இஸ்ரோவால் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான ஒரு பகுதியாக, லடாக்கில் உள்ள லே பகுதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சிறப்பு ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர். வேற்று கிரகங்களில் உள்ள சூழல்களை பிரதிபலிக்கும் வகையில் கலன்களை உருவாக்கி, ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். விண்வெளி அல்லது வேற்று கிரகங்களில் உள்ள தட்பவெப்ப நிலைகளில் இத்தகைய சோதனைகளை நடத்துவது அவசியம் எனக் கருதப்படுகிறது, எனவே ‘அனலாக்’ சோதனை லே பகுதியில் நடைபெறுகிறது. புதிய தொழில்நுட்பங்கள், ரோபோடிக் கருவிகள், வாகனங்கள், வேற்று கிரகங்களில் அல்லது விண்வெளியில் பயன்படுத்தப்படும் வசிப்பிடங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், மின் உற்பத்தி சாதனங்கள் மற்றும் இடம் பெயர் சாதனங்கள் ஆகியவற்றின் மேல் கவனம் செலுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *