இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) சிறந்த சாதனையை படைத்துள்ளது, இஸ்ரோ GSLV -F15 ராக்கெட்டை காலை 6:23 மணிக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீ ஹரிகோட்டா, ஏவுதளத்திலிருந்தது NVS-02 செயற்கைக்கோளை ஏற்றிய GSLV-F15-ராக்கெட்டை ஐ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த நிகழ்வு இஸ்ரோ-வின் 100வது ராக்கெட் ஏவுதல் ஆகும். புதிய தலைவராக நியமிக்கப்பட்ட வி. நாராயணனின் தலைமையில் நடைபெறும் முதல் ஏவுகணை அனுப்புதல் என்பது குறிப்பிடத்தக்கது. நாராயணன் கூறுகையில், இந்த மிஷனின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, செயற்கைக்கோள் “குறிப்பிட்ட ஜியோசிங்க்ரோனஸ் டிரான்ஸ்பர் ஆர்பிட் (GTO)-ல் சரியான பாதையில் உள்ளது” எனக் கூறினார். இந்த GSLV-F15 இந்தியாவின் ஜியோசிங்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவியலின் 17வது மற்றும் உள்ளூர் க்ரியோஜெனிக் கட்டத்தைப் பயன்படுத்தும் 11வது மிஷன் ஆகும். மேலும், இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் 8வது செயல்பாட்டு ராக்கெட் ஆகும், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நடத்தப்படும் 100வது ஏவியாகவும் இது அடையாளம் காணப்படுகிறது. இந்த மிஷனின் முதன்மை நோக்கம் NVS-02 செயற்கைக்கோளைக் GTO இல் நிலைநிறுத்துவது ஆகும். இஸ்ரோவின் வருங்கால நவீன செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட் ஏவுதலுக்கு தொடர்பான சவால்களை சமாளிக்க தன்னம்பிக்கையுடன் இஸ்ரோ உள்ளதாக கூறப்படுகிறது.
 
	

 
						 
						