தமிழ்நாடு முழுவதும் கிறித்துவ மதத்தினர் கொண்டாடும் ஈஸ்டர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வுகள் மற்றவை

தமிழ்நாடு முழுவதும் தேவாலயங்களில் ஈஸ்டர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இயேசு கிறிஸ்து உயிர்த்த தினமான ஈஸ்டர் பெருவிழா உலகமெங்கும் கிறிஸ்தவர்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நள்ளிரவு மற்றும் காலையில் திருப்பலி பூஜைகள் நடந்தன. கொடைக்கானல் வட்டார அதிபரும் மூஞ்சிக்கல் பங்கு தந்தையுமான அருட்தந்தை ஜெயசீலன் தலைமை வகித்தார்.
நள்ளிரவில் ஒளி வழிபாடு, திருவார்த்தை வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு, திரு விருந்து வழிபாடு ஆகிய நான்கு பகுதிகளாக திருப்பலி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கலந்து கொண்ட இறைமக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, இயேசு உயிர்தெழுந்ததை கொண்டாடினர். இதையொட்டி இயேசு உயிர்த்தெழும் காட்சிகளும் அரங்கேற்றப்பட்டன. இதேபோல உகார் தே நகர் குழந்தை இயேசு ஆலயத்தில் பங்குத்தந்தை பாப்புராஜ் தலைமையிலும், செண்பகனூர் ஆலயத்தில் பங்குத்தந்தை அப்போலின் கிளாரட் ராஜ் தலைமையிலும், பாக்கியபுரம் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை வினோத் மத்தியாஸ் தலைமையிலும், அட்டுவம்பட்டி தேவாலயத்யதில் பங்குத்தந்தை துரைராஜ் தலைமையிலும் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *