இந்தியாவும் பாகிஸ்தான் இடையே உள்ள விவகாரங்களில் அமெரிக்கா தலையிட போவதில்லை என அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் வரலாறு காணாத தாக்குதல்களை தொடர்ந்துள்ளதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் உருவாகியுள்ளது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் படைகள் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இதற்கு எதிராக இந்தியா நேரடி தாக்குதல்களை தொடர்ந்ததால் மிகுந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக துணை அதிபர் வன்ஸ் கூறியது, நாங்கள் அரசியல் பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கிறோம். இரண்டு நாடுகளும் போர்களை தவிர்க்க வேண்டும் ஆனால் அதை அமெரிக்கா கூற முடியாது. இந்த போர் அணு ஆயுத போராக மாறக்கூடாது என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. அப்படி நடந்தால் பேரழிவு ஏற்படும். போரை நிறுத்துவது அந்த நாடுகளின் தலைவர்களின் கையில் உள்ளது. இவ்வாறு ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

