ஜியோ பயனாளர்கள் இனி ஜெமினி ஏஐ ப்ரோ சேவையை 18 மாதங்கள் முழுவதும் இலவசமாக பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு மலிவான விலையில் மொபைல் டேட்டா வழங்கி டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்திய ஜியோ நிறுவனம், இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) துறையிலும் மக்களை இணைக்க புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.ரிலையன்ஸ் இன்டெலிஜென்ஸ் நிறுவனம், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டு திட்ட நிகழ்வில் பேசிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி, “ஏஐ அனைவருக்கும்” என்ற கோஷத்துடன், ஜியோ பயனாளர்கள் ரூ.35,100 மதிப்புள்ள Gemini AI Pro சேவையை 18 மாதங்கள் இலவசமாகப் பெற முடியும் என்று அறிவித்தார்.இந்த சேவையின் மூலம் பயனாளர்கள் வரம்பற்ற சாட் வசதி, 2TB கிளவுட் ஸ்டோரேஜ், வீடியோ மற்றும் புகைப்பட உருவாக்கம் போன்ற பல முன்னேற்றமான அம்சங்களை பயன்படுத்த முடியும்.முதற்கட்டமாக 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களுக்கே இந்த சேவை வழங்கப்படுகிறது. விரைவில் அனைத்து ஜியோ பயனாளர்களுக்கும் இந்த ஏஐ அனுபவத்தை வழங்க ஜியோ நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

