குவாட் உச்சி மாநாடு: அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி

அரசியல் ஆஸ்திரேலியா இந்திய வணிகம் உக்ரைன் உலகம் ஐரோப்பா கனடா வட அமெரிக்கா

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து செயல்படும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் இன்று (செப். 21) நடைபெறுகிறது. இதில் உலகளாவிய பிரச்சினைகள், இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகள் இடையே மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் பிரதமர் மோடி பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ளார். இன்று நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பின்னர், நாளை நியூயார்க் நகரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 23-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் “எதிர்காலத்திற்கான மாநாடு” என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டத்தில் அவர் உரையாற்றவுள்ளார். இந்த பயணத்தின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போன்ற சர்வதேச தலைவர்களை மோடி சந்திக்கவுள்ளார். இதற்காக அவர் தனி விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.குவாட் மாநாட்டில் ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *