வெள்ளக்காடான ஸ்பெயின் கனமழை காரணமாக 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள் முதன்மை செய்தி வானிலை

ஸ்பெயின் நாட்டில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் நடவடிக்கைகள் வெள்ளம் காரணமாக தற்போது ஸ்பெயின் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் கார்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டிய சவால்கள் அங்கு நிலவுகின்றன. குறிப்பாக, கிழக்கு வலேன்சியா பகுதியில் மட்டும் 155 பேர் உயிரிழந்தது உறுதியாகக் கூறப்பட்டுள்ளது. இது சுனாமி பேரலைகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை விட அதிகமாகவே உள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை அன்று ஸ்பெயினில் கனமழை பெய்தது. இதன் விளைவாக கிழக்கு வலேன்சியா பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் சாய்ந்த மின்கம்பங்கள், வேரோடு சாய்ந்த மரங்கள், சேரும் சகதியுடன் கூடிய வீதிகள் மற்றும் வீடுகள், ஒன்றின் மீது ஒன்று நின்ற கார்கள் என அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதற்கிடையில், வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை (அக்.31) அன்று வெள்ள பாதிப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை தேடும் போது, அவர்களின் மனங்களில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. பலர் காணாமல் போயுள்ளதால், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மீட்பு படையினர் முதியவர்களை மட்டுமே மீட்டுள்ளனர்.வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் ஸ்பெயின் ராணுவம் மீட்டுள்ளது. சுமார் 70 பேரை இவ்வாறு மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்கள் மொட்டை மாடி மற்றும் கார்களில் சிக்கி இருந்தவர்கள். தரைவழியாக வெள்ளம் பாதித்த பகுதிக்கு புதன்கிழமை அன்று ராணுவம் அணுக முடியாத சூழ்நிலையை எதிர்கொண்டது. தற்போது அங்கு வீடு வீடாக ராணுவத்தினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.தரைவழியாக வெள்ளம் பாதித்த பகுதிகளை புதன்கிழமை அணுக முடியாத சூழ்நிலையை ராணுவம் எதிர்கொண்டது. தற்போது, அங்கு வீடு வீடாக ராணுவத்தினர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.காலநிலை மாற்றம் இதற்கான காரணமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை கண்டறிதல் எங்களின் முதன்மை கடமையாகும். இதன் மூலம், அவர்களின் குடும்பங்களுக்கு உதவ முடியும் என நாங்கள் நம்புகிறோம் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ தெரிவித்தார். காலநிலை மாற்றம் இந்த திடீர் மழை வெள்ளத்திற்கு காரணம் என அந்த நாட்டின் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கடந்த 20 மாதங்களில் வலேன்சியாவில் ஏற்பட்ட நிலைமைகள் இதற்கான அடிப்படையாக இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *