விக்ரம் படத்தை அடுத்து தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் அவரது 234வது படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. மணிரத்னம் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களையும் முடித்த நிலையில் நாயகன் படத்தின் அதே கூட்டணி மீண்டும் இணைவதில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது தமிழ் சினிமா. இந்த படத்தில் 7 மாநிலங்களைச் சார்ந்த பிரபல ஹீரோக்கள் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த பிரபல ஹீரோக்களில் ஏற்கனவே கமலுடன் ஹேராம் படத்தில் நடித்த ஷாருக்கானும் ஒருவர். அதோடு இந்த 7 மாநில ஹீரோக்களும் கெஸ்ட் ரோல்களில் நடிக்காமல் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்கிறார்கள். அந்த வகையில் கமலின் 234வது படம் ஒரு மெகா பான் இந்தியா படமாக உருவாக்கப் போகிறது. தற்போது இப்படத்தின் கதை மற்றும் திரைகதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் மணிரத்னம்.