ஐ.சி.சி.,யின் ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் இடம்பிடித்த 11வது இந்திய வீரர் எனும் புகழ் அவருக்கு கிடைத்துள்ளது.ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து, ‘ஹால் ஆப் பேம்’ விருதுகளை வழங்கி ஐசிசி கவுரவித்து வருகிறது. இந்நிலையில் இப்பட்டியலில் புதிதாக ஏழு பேரை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி., அவர்களை கவுரவித்துள்ளது.இதில் இந்த ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐசிசி உலகக் கோப்பையை இந்தியாவுக்காக வென்று தந்த மகேந்திர சிங் தோனி பெயர் இடம் பெற்றுள்ளார். புதிதாக இணைந்த ஏழு வீரர்கள்:* தோனி (இந்தியா)* மேத்யூ ஹைடன் (ஆஸ்திரேலியா )* டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து)* ஹாசிம் அம்லா (தென்னாப்பிரிக்கா )* கிரீம் ஸ்மித் (தென்னாப்பிரிக்கா* சனா மிர் ( பாகிஸ்தான் மகளிர் அணி)* சாரா டெய்லர் ( இங்கிலாந்து மகளிர் அணி). மேலும் இதுவரை ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இடம்பெற்ற இந்திய வீரர்கள்: சச்சின் டெண்டுல்கர், பிஷன் சிங் பேடி, சுனில் கவாஸ்கர், கபில் தேவ், வினு மன்கட், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், விரேந்தர் சேவாக், டயானா எடுல்ஜி ( மகளிர் அணி), நீத்து டேவிட் ( மகளிர் அணி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
