சென்னையில் இன்று சென்னை ரன்னர்ஸ் சார்பாக மாரத்தான் போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்
சென்னை ரன்னா்ஸ் மாரத்தான் நெடுந்தூர ஓட்டக்குழுவினா் சாா்பில் மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது.
மாரத்தானை முன்னிட்டு தாம்பரம் மாநகர காவல் எல்லையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோா் பங்கேற்கும் இந்த மாரத்தான், நேப்பியா் பாலத்தில் இருந்து திரு.வி.க.பாலம், சிபிடி சந்திப்பு, டைடல் பாா்க், துரைப்பாக்கம் வழியாக தாம்பரம் மாநகர காவல் எல்லையான ராஜீவ் நகா் சந்திப்பு வந்தடைந்து, அங்கிருந்து சோழிங்கநல்லூா், கே.கே.சாலை, அக்கரை, பனையூா், எம்ஜிஎம் வழியாக இந்திய கடல்சாா் பல்கலைக்கழகம் அருகில் மாரத்தான் முடிவடைகிறது.
எனவே, அதிகாலை 4 முதல் 9 மணி வரை, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டது. இம்மாரத்தானில் பல்வேறு நகரங்களில் இருந்தும் வீரர்கள் வந்த கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் நிறைவு செய்ததற்கான பதக்கங்களும் வழங்கப்பட்டன.
![](https://nritamil.com/wp-content/uploads/2023/01/mara.jpeg)