மனிதர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க விரிவான மருத்துவ ஆய்வுகள் நடத்தும் ரஷ்யா, சீனா .

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆரோக்கியம் உலகம் சிறப்பு சீனா செய்திகள் மருத்துவம் மருத்துவம் ரஷ்யா

மனிதனின் ஆயுட்காலத்தை நீட்டித்து கொண்டு செல்வது குறித்த ஆய்வுகள் ரஷ்யாவில் வேகம் பெற்று வருகின்றன. எத்தனை வயதானாலும் இளமையை அப்படியே தக்க வைத்து கொள்ளவும், இயன்றவரை மரணத்தை தள்ளிப்போடவும் ரஷ்யாவில் தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 9 ஆண்டுகளில் 50 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக Novaya Gazeta Europe என்ற பத்திரிக்கை தெரிவித்து இருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் ஆய்வுகளுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் இந்திய ரூபாய் மதிப்பில் 4,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அப்பத்திரிக்கை தெரிவித்து இருக்கிறது. இதில் ஒரு ஆய்வு ரஷ்ய அதிபர் மகள் மரியா வொரன்ட்சோவா தலைமையில் மேற்கொள்ளப்படுவதாகவும், ரஷ்யாவில் அரசு துறைகள் தவிர, தனியார் நிறுவனங்களும் வயது மூப்பை தடுத்து மனிதனின் வாழ்நாளை நீட்டிப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் உண்டு. 72 வயதான ரஷ்ய அதிபர் புதின், தற்போது துடிப்பான நபராக உள்ளார். வயது மூப்பை தடுப்பது, இறவாநிலை குறித்த ஆய்வுகளில் புதினுக்கு ஆர்வம் அதிகம் என கூறப்படுகிறது. அண்மையில் சீனா சென்றபோது கூட அந்நாட்டு அதிபர் சீ சின்பிங்குடன் வயது மூப்பு தடுப்பு, இறவாநிலை குறித்து புதின் பேசியிருந்தார். உயிர் தொழில்நுட்பத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் இளமையை மனிதன் அடையக்கூடியதாகவும், மரணத்தை வெல்லும் சூழ்நிலையை உருவாக்கக்கூடியதாகவும் இருக்குமென புதின் கூறியுள்ளார். ரஷ்யாவின் மாதிரியே, சீனாவும் வயதானதை தடுக்கவும், வாழ்நாளை நீட்டிக்கவும் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *