தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1 கோடி ரூபாய் நிதியுதவி

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் சினிமா செய்திகள் தமிழ் பள்ளி நிகழ்வுகள் தமிழ்நாடு மற்றவை முதன்மை செய்தி

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான நிதியை நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
இதற்கான காசோலையை நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார். அப்போது சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *