சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாடிய முத்தமிழ் மன்றம்; கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் என கோலாகமாக கொண்டாடிய தமிழர்கள்

அரபு நாடுகள் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றவை முதன்மை செய்தி

சவுதி அரேபியாவில் கிழக்கு பிராந்தியம் தம்மாமில் கடந்த 38 ஆண்டுகளாக பாலையில் பைந்தமிழர் பயணமாய் பயணித்து வரும் “முத்தமிழ் மன்றம்” கடந்த 17.11.2023 (வெள்ளி) அன்று தம்மாமில் தீபாவளி நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தது, இதில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சிறப்பு பட்டிமன்றம், நகைச்சுவை நாடகம், தேன் திணை கலந்த இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், குழந்தைகள் கலை நிகழ்ச்சி மற்றும் 33 ஆம் ஆண்டின் இரண்டாம் இதழான ” பாலைவனத் தென்றல்” தீபாவளி சிறப்பிதழாக வெளியிடப்பட்டு செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எனப் பாட்டுடை தலைவன் பாரதியின் வரிகளுக்கு உயிர் கொடுத்து ஓவியமாய் , காவியமாய் கண்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் முத்தமிழ் மன்ற உறுப்பினர்கள் அவர்தம் குடும்பத்தாருடனும், NRTIA நிர்வாக உறுப்பினர்களும், கோபார் தமிழ் சொல்வேந்தர் மன்றத்தினரும், TNSWA நிர்வாக உறுப்பினர்களும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாக உறுப்பினர்களும், கிழக்கு பிராந்திய திமுக நிர்வாக உறுப்பினர்களும் மற்றும் IWF நிர்வாக உறுப்பினர்களும் மேலும் இப்பகுதியில் வாழும் தமிழ் ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள், இரவு விருந்துடன் இனிதே நிகழ்ச்சி நிறைவேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *