சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நேரடி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பு

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா விண்வெளி சார்ந்தவை

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நேரடி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். ஜூன் 14 ஆம் தேதி அவர்கள் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறால் அவர்கள் இருவரும் அங்கேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தபடி இருவரும் நேரடியாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர். அப்போது பேசிய புட்ச் வில்மோர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தார். விண்வெளி மையத்தில் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்தார். அனைத்துக்கும் தயாராகவே வந்திருப்பதாகவும் சுனிதா வில்லியம்ஸ் நெகிழ்ச்சிபடக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *