நாடு முழுவதும் பாஜக கூட்டணி எம்எல்ஏக்களின் பலம் 61% உயர்வு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

இந்தியாவில் உள்ள மாநில சட்டசபைகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது செல்வாக்கை அதிரடியாக அதிகரித்துள்ளது.கடந்த 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் தனது நிலையை வலுப்படுத்திய பாஜக, தற்போது நாடு முழுவதும் உள்ள மாநில சட்டசபைகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. எதிர்க்கட்சிகளின் கோட்டையாகக் கருதப்பட்ட மாநிலங்களிலும் பாஜகவின் வியூகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு, அங்கு பாஜகவின் பலத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கிடைத்துள்ள புள்ளி விபரங்களின்படி, நாடு முழுவதும் உள்ள மொத்த 4,123 எம்.எல்.ஏக்களில் பாஜகவின் பங்கு 37.16 சதவீதத்தில் இருந்து 43.97 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பிறகு 1,532 ஆக இருந்த பாஜக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை தற்போது 1,813 ஆக அதிகரித்துள்ளது. ஒன்றிய பாஜக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் கணிசமான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் மொத்த பலம் 50.84 சதவீதத்தில் இருந்து 61.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த கூட்டணியின் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 2,096ல் இருந்து 2,530 ஆக உயர்ந்துள்ளது. இதில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 36 இடங்களையும், சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி 20 இடங்களையும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 19 இடங்களையும் கூடுதலாகப் பெற்று கூட்டணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *