2024 ஒலிம்பிக்ஸ் தீபம் பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது; ஜூலை 26ஆம் தேதி பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 துவங்கவுள்ளது

உலகம் ஐரோப்பா சுற்றுலா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகளையொட்டி, மார்செய்லி நகரத்திற்கு ஒலிம்பிக் தீபம் வந்தடைந்தது. கிரீஸ் நாட்டில் இருந்து புறப்பட்ட ஒலிம்பிக் தீபம், 12 நாட்கள் பயணத்திற்கு பிறகு, 128 ஆண்டுகள் பழமையான கப்பல் மூலம் பிரான்சின் துறைமுக நகரமான மார்ச்செய்லிக்கு வந்தடைந்தது. அப்போது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், 2012-ம் ஆண்டின் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியன் பிளாரென்ட், 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாலாலிம்பிக் தடகள வீரர் நான்டெனின் ஆகியோர் ஒலிம்பிக் தீபத்தை எடுத்து வந்தனர். பின்னர், அதை மார்செய்லி நகரத்தில் பிறந்த ராப்பர் ஜூல் என்பவரிடம் வழங்கினார். அவர், அங்கு திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் முன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார்.
2024, ஜூலை 26ஆம் தேதி ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்குகின்றன. கண்கவர் வானவேடிக்கைகள், கலைநிகழ்ச்சிகளோடு ஒலிம்பிக்ஸ் 2024 துவங்க உள்ளது. ஒலிம்பிக்ஸ் போட்டிகளை காண உலகெங்குமிருந்து விளையாட்டு ரசிகர்கள், சுற்றுலா பயணிகள் வரவுள்ளனர். 2028ஆம் ஆண்டின் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாகாணத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *