OnePlus நிறுவனம் ‘Turbo’ ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிதாக OnePlus Turbo 6X மற்றும் OnePlus 6X Pro புதிய மாடல்கள் அறிமுகம்

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்திய வணிகம் இந்தியா உலகம் சீனா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

OnePlus நிறுவனம் தனது ‘Turbo’ ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிதாக OnePlus Turbo 6X மற்றும் OnePlus 6X Pro ஆகிய இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மாடல்களின் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
டிஸ்ப்ளே
OnePlus Turbo 6X ஆனது 6.72 அங்குல Full HD+ LCD திரையைக் கொண்டுள்ளது. மேலும் இது hardware-level DC டிம்மிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. மேலும் ஈரமான கைகள், எண்ணெய் படிந்த விரல்கள் அல்லது கையுறைகளை அணிந்திருக்கும்போதும் பயன்படுத்தக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
OnePlus Turbo 6X Pro மாடலானது 6.78 அங்குல 1.5K Samsung AMOLED திரையைக் கொண்டுள்ளது. மேலும், Pro மாடலானது முழு பிரகாசத்திலும் செயல்படும் DC டிம்மிங் மற்றும் திரை நிபுணர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட கண் பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளது.
செயல்திறன்
OnePlus Turbo 6X ஆனது TSMC-யின் 4nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட MediaTek Dimensity 7360 SUPER சிப்செட் மூலம் இயங்குகிறது.
Turbo 6X Pro மாடலானது, அதே 4nm கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஆனால் அதிக திறன் வாய்ந்த MediaTek Dimensity 7400 SUPER processor-யைக் கொண்டுள்ளது. அத்துடன் சிறந்த இணைப்பு வசதிக்காக இது 360-டிகிரி சரவுண்ட் ஆன்டெனா அமைப்பையும் (360-degree surround antenna system) கொண்டுள்ளது.
கேமரா
கேமரா வசதியைப் பொறுத்தவரை, Turbo 6X மாடலில் 50 மெகாபிக்சல் primary camera மற்றும் 2 மெகாபிக்சல் secondary சென்சார் ஆகியவை உள்ளன; செல்ஃபிக்காக 8 மெகாபிக்சல் front camera வழங்கப்பட்டுள்ளது.
மறுபுறம், Turbo 6X Pro மாடலானது, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) வசதியுடன் கூடிய 50 மெகாபிக்சல் primary சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா என மேம்பட்ட கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் அதிக தெளிவுத்திறன் கொண்ட 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது; மேலும் இது லைவ் போட்டோஸ் (Live Photos), சாஃப்ட் லைட் போர்ட்ரெய்ட் மோட் (Soft Light Portrait mode) மற்றும் விண்டேஜ் ஃபிலிம் ஃபில்டர்கள் போன்ற அம்சங்களையும் ஆதரிக்கிறது.
பேட்டரி
இரண்டு சாதனங்களின் பேட்டரி திறனும் ஒரு முக்கிய சிறப்பம்சமாகும். OnePlus Turbo 6X மாடலில் 7,000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி உள்ளது; இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதிகள் உள்ளன. அதேவேளையில், Turbo 6X Pro மாடலானது 8,000mAh பேட்டரி மற்றும் வேகமான 80W சார்ஜிங் வசதியுடன் வருகிறது.
OnePlus-இன் தகவலின்படி, Pro மாடலை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 29 மணிநேரம் வரை குறுகிய வீடியோக்களைப் பார்க்கலாம், 17 மணிநேரம் வரை நேவிகேஷன் (வழிசெலுத்தல்) பயன்படுத்தலாம் அல்லது 8 மணிநேரம் வரை தொடர்ந்து கேம் விளையாடலாம்.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்
OnePlus Turbo 6X
8GB RAM + 128GB ஸ்டோரேஜ் – 1,899 யுவான் (ரூ. 26,700)
8GB + 256GB ஸ்ட்டோரேஜ் – 1,999 யுவான் (ரூ. 28,100)
12GB + 256GB ஸ்டோரேஜ் – 2,299 யுவான் (ரூ. 32,300)
OnePlus Turbo 6X Pro
8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் – 1,999 யுவான் (ரூ. 28,100)
8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் – 2,099 யுவான் (ரூ. 29,500)
12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் – 2,399 யுவான் (ரூ. 33,700)
வண்ணங்கள்
OnePlus Turbo 6X மாடலானது White (வெள்ளை), Green Cloud (பச்சை) மற்றும் Starry Black (கருப்பு) ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது. மறுபுறம், Turbo 6X Pro மாடலானது Heartbeat Orange (ஆரஞ்சு) மற்றும் Prancing Horse Black (கருப்பு) ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் எப்போது…?
தற்போதைய நிலவரப்படி, இந்தியா உள்ளிட்ட உலகளாவிய சந்தைகளில் இந்தச் சாதனங்களை அறிமுகப்படுத்துவது குறித்த எந்தத் திட்டத்தையும் OnePlus அறிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *