அதிமுகவின் பொதுச்செயலாளரான பிறகு அமித்ஷாவை முதல்முறையாக இன்று சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
இன்று இரவு 8 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இடம்பெற்றிருந்தார். இந்த சந்திப்பின் போது நாம் பிரிந்திருந்தால் எதிரிகளுக்கு வெற்றி எளிமையாகிவிடும் என டெல்லியில் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அரசியல் நிலவரம், தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணியை குழப்பமில்லாமல் செயல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.