இஸ்ரோவின் 100வது ராக்கெட்டில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளின் தொழில்நுட்ப கோளாறு.

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் விண்வெளி சார்ந்தவை

தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, இஸ்ரோ அமைப்பின் 100வது ராக்கெட்டில் என்விஎஸ்-02 செயற்கைக்கோளை ஒரு புவிவட்டப் பாதையிலிருந்து மற்றொரு புவிவட்டப் பாதைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை என இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்தியாவில் தரை, வான் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பயன்பாட்டுக்கு உதவும் மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு (ஐஆா்என்எஸ்எஸ்) திட்டத்தின் கீழ், என்விஎஸ்-02 செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இதற்குப் பிறகு, என்விஎஸ்-02 செயற்கைக்கோள் தனது புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, பூமியை சுற்றி செல்கிறது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, அந்த செயற்கைக்கோளை ஒரு புவிவட்டப் பாதையிலிருந்து மற்றொரு புவிவட்டப் பாதைக்கு மாற்ற முடியவில்லை. தற்போது, அந்த செயற்கைக்கோள் நீள்வட்ட சுற்றுப் பாதையில் பூமியை சுற்றி செல்கிறது. இஸ்ரோ, செயற்கைக்கோள் நல்ல நிலையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *